
கிரெடாய் சென்னை குறித்து
வளம்குன்றா, நிலைக்கத்தக்க சூழலமைப்பை உருவாக்குகிறோம்.
இந்தியாவின் ரியல் எஸ்டேட் டெவலப்பர் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI), என்பதே இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழில்துறைக்கான தலைமை அமைப்பாக செயல்படுகிறது.
நமது நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு ஏறக்குறைய 10 % பங்களிப்பை ரியல் எஸ்டேட் துறை வழங்குகிறது மற்றும் இந்நாட்டில் வேலைவாய்ப்பை வழங்குவதில் இரண்டாவது மிகப்பெரிய துறையாக இது திகழ்கிறது.
தொழில்துறை முன்னேற்றத்துறை மற்றும் உள்ளார்ந்த தொழில்கொள்கை அமைப்பால் (DPIIT) ஆல் வெளியிடப்பட்டுள்ள தரவின்படி அந்நிய நேரடி முதலீடு செய்யப்படுவதில் கட்டுமானத்துறை நான்காவது மிகப்பெரிய துறையாக இருக்கிறது. ஏப்ரல் 2000-லிருந்து, மார்ச் 2020 வரையிலான காலஅளவில் இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 42.50 பில்லியன் யுஎஸ். டாலராகும்.
இந்திய ரியல் எஸ்டேட் தொழில்துறையின் அமைப்பையே முழுமையாக மாற்றி மேம்படுத்தும் குறிக்கோளோடும் மற்றும் அனைவருக்கும் வீட்டுவசதி மற்றும் வாழ்விடம் என்ற நோக்கத்தை நிஜமாக்க வேண்டுமென்ற மனஉறுதியோடு செயல்பாட்டை தொடங்கிய கிரெடாய், 21 மாநிலங்களில் 220 நகர கிளைகளில் 20,000-க்கும் அதிகமான உறுப்பினர்களின் பங்கேற்போடு அதிவிரைவான வளர்ச்சியை கிரெடாய் பதிவு செய்திருக்கிறது.
அரசாங்கம், கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் தொழில்முறை நிபுணர்கள் மற்றும் நுகர்வோர்கள் என இத்துறையோடு தொடர்புடைய அனைத்து பங்காளர்களுடனும் இணைந்து கிரெடாய் அமைப்பு நெருக்கமாக செயலாற்றுகிறது. இந்தியாவின் ரியல் எஸ்டேட் தொழில்துறையானது, முறையியல் சார்ந்து வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதை உறுதிசெய்வதே இதன் செயல்முயற்சியாகும்.
இன்று, மத்திய மற்றும் மாநில அரசுகளினால் அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னர்களாக திகழும் நாங்கள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், நிதியமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்திய தரநிலைகள் நிறுவனம் (BIS), ஆற்றல் செயல்திறன் நிறுவனம் (BEE) ஆகியவை உட்பட, அரசாங்கங்களின் பல்வேறு குழுக்கள் மற்றும் கொள்கை வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பல குழுக்களில் பிரதிநிதிகளாக ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறோம்.