செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்
ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்ற பல்வேறு செயல் நடவடிக்கைகளின் விரிவான அணிவரிசை.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ரியல் எஸ்டேட் முறையானது ஒரு குறிப்பிடத்தக்க உருமாற்றத்தை பெற்றிருக்கிறது. உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் திறனளவுகளை உருவாக்குவதற்கான அரசின் முயற்சிகளோடு தனது செயல்பரப்பை விரிவாக்கம் செய்வதில் இந்த தொழில்துறை கொண்டிருக்கும் கூர்நோக்கமானது, நாடெங்கிலும் மிகப்பெரிய அளவில் இயக்க ரீதியிலான செயல்திறனுக்கு உத்வேகமளித்திருக்கிறது. RERA, REITs, பிசினஸ் செய்வதை எளிமையாக்குதல் மற்றும் அனைவருக்கும் வீட்டுவசதி போன்ற முனைப்புத்திட்டங்கள், ரியாலிட்டி தொழில்துறையில் அதிகம் தேவைப்படும் வெளிப்படைத்தன்மையை இதற்கு வழங்கியிருக்கிறது. முதலீடு அதிகளவு இத்துறையில் வருவதை இது விளைவித்திருக்கிறது. இந்த வாய்ப்புகளை உகந்தவாறு பயன்படுத்தி பலனடைய, வலுவான கொள்கை ஆதரவு, சிறப்பான ரியல் எஸ்டேட் தீர்வுகள் மற்றும் முதலீடுகளின் நிலையான வரவு ஆகியவற்றின் மூலம் இத்துறையை தரம் உயர்த்துவதற்கு அரசும், தொழில்துறையும் கூட்டாக இணைந்து செயல்படுவது அவசியமாகும்.
நீண்டகால அடிப்படையில் இந்த மாற்றங்கள் முற்போக்கானவையாக இருக்கின்றபோதிலும், குறுகிய காலஅளவில் இவைகள் சற்றே சீர்குலைவை விளைவிக்கின்றன. இத்தொழில்துறை மெதுவான, சற்றே இடையூறுகள் நிலவுகிற ஆனால் நிலையான வளர்ச்சியை எதிர்நோக்குகிற, பாதிப்பிலிருந்து மீண்டெழுகிற ஒரு காலகட்டத்திற்கு வழிவகுத்தன.
இஸ்ரேலில் நிகழ்ந்தேறிய வரலாற்றில் இதைக் காணமுடியும். இன்றைக்கு, பிசினஸ் பொருளாதாரத்தில், சரிவிலிருந்து மீண்டெழுவதற்கான ஒரு உகந்த எடுத்துக்காட்டாக இஸ்ரேலின் பொருளாதாரம் நிற்கிறது. நாற்புறமும் நாட்டுக்கு எதிரான வெறுப்பு சூழல் நிலவுகிறபோதிலும் இதுநாள்வரை வளர்ச்சி தடைப்படாத, எதிரிகளால் தொட இயலாத நாடாக இஸ்ரேல் தொடர்ந்து இருக்கிறது மற்றும் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சியையும், செழுமையையும் பெற்று வருகிறது. எதிர்ப்புகளுக்கிடையே உறுதி மற்றும் மீண்டெழும் திறன் என்ற பண்பே இதனை இஸ்ரேலுக்கு சாத்தியமாக்கியிருக்கிறது. நமது போராட்டம் மற்றும் வெற்றிக்கு இந்தியாவின் சாட்சியமாக அதிகம் தொடர்புபடுத்தக்கூடிய ஒப்பீடாக இது இருக்கிறது. உலகெங்கிலும் இதற்குமுன் கண்டிராத பொருளாதார, புவியியல் சார்ந்த, நிதி சார்ந்த மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான சவால்களை உலகெங்கிலும் நகரங்களும், மாநிலங்களும், பெருநகரங்களும் எதிர்கொள்கின்ற வேளையில் இருக்கக்கூடிய குறைவான நிலப்பகுதியை வளங்குன்றா நிலைப்புத்தன்மையுடன் சிறப்பாக பயன்படுத்துகிற ஒரு முன்னுதாரணத்தை இஸ்ரேல் வழங்கியிருக்கிறது. எதிர்கால சாத்திய வாய்ப்புகள் மற்றும் நடப்பு விவகாரங்களை தாங்கி வருகிற, CBRE-யின் மூலம் வெளிவருகிற CREDAI NATCON-ன் சமீபத்திய பதிப்பு, பெரிய மற்றும் சிறப்பான விளைவுகளை காண்பதற்காக தனது பாரம்பரியத்தை மறு கண்டறிதல் செய்து அதன் வேர்களை இஸ்ரேல் எப்படி வலுப்படுத்தியிருக்கிறது என்பதை இத்துறையைச் சேர்ந்தவர்கள் கற்றுக்கொள்வதற்கான ஒரு எடுத்துக்காட்டை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
‘உயர் நேர்த்தி மற்றும் மீண்டெழுகையின் சங்கமம்’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாகும். பொறுமையும் மற்றும் சிறிதும் தளராத விடாமுயற்சியும் சிறப்பான விளைவுகளை எப்படி தருகின்றன என்பதை இது விளக்குகிறது. இதில் தர அளவுகோல்களை நிறுவிய ஒரே நாடாக இஸ்ரேலை மட்டும் குறிப்பிட இயலாது; இந்தியாவும் இதுபோன்ற ஒரு வளர்ச்சி சாதனையை செய்துகாட்டியிருக்கிறது. ரியல் எஸ்டேட் துறைதான் இதில் உண்மையான ஹீரோ. நாற்புற எல்லைகளிலும் குழப்பம் மற்றும் அழிவு நிலவியபோதிலும் வலுவாக நிலைத்து நிற்கும் இஸ்ரேல், கற்றல் மற்றும் நம்பிக்கைக்கான ஆதாரமாக திகழ்கிறது என்ற போதிலும் பிசினஸ் மற்றும் பொருளாதார ஆகிய இரு விஷயங்களிலும் பாதிப்பிலிருந்து மீண்டெழும் திறனின் பலனை இந்தியாவும் சுவைத்திருக்கிறது.
தலைவர்
என்க்ளேவ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட்
தலைவர்
ஏஆர்கே இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்
தலைவர்
ஆர்வி நிர்மான் பிரைவேட் லிமிடெட்
ஸ்பான்சர்ஷிப் குழு
போன்சாய் ஹவுசிங்
அமைப்புக் குழு
இந்திரா அசோஸியேட்ஸ்
அமைப்புக் குழு
லோட்டஸ் பிராப்பர்டீஸ் லிமிடெட்
அமைப்புக் குழு
சிஎஸ்ஆர் எஸ்டேட்ஸ் லிமிடெட்
உள்ளடக்க குழு
மன்பும் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்
உள்ளடக்க குழு
இன்கார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட்
இஸ்ரேலின் மத்திய தரைக்கடலையொட்டி அமைந்திருக்கும் நகரமான டெல் அவிவ்-ல் 1930-களின் பாஹாஸ் கட்டிடங்கள், இதன் ஒயிட் சிட்டி கட்டிடக்கலை பகுதியில் ஆயிரக்கணக்கில் காணப்படும் உலகெங்கிலும் வாழ்ந்த யூத சமூகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் மல்டிமீடியா காட்சி ஆவணங்கள் இடம்பெற்றுள்ள பெய்ட் ஹாட்புட்சாட் போன்ற அருங்காட்சியகங்கள் இங்கு தான் உள்ளன. இந்நாட்டின், தொல்லியல், நாட்டுப்புற கலைகள் மற்றும் கி.மு.12வது நூற்றாண்டு சிதைவுகளின் அகழாய்வுகள் ஆகியவை எரிட்ஸ் இஸ்ரேல் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. டெல் அவிவ், உலகில் அதிக துடிப்பான, உயிரோட்டமுள்ள நகரங்களுள் ஒன்றாகும். நியூ யார்க் டைம்ஸ்-ஆல் ‘Mediterranean Capital of Cool’ என அழைக்கப்பட்ட இந்நகரம், உலகத்தரம் வாய்ந்த இரவு வாழ்க்கை, மகிழ்ச்சியூட்டும் கலாச்சார சூழல், அற்புதமான உணவுகள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய, தொன்மையான கட்டிடங்கள் மற்றும் ஒரு சர்வதேச கண்ணோட்டம் ஆகியவற்றைக் கொண்ட சிறந்த நகரமாகத் திகழ்கிறது. ஆகஸ்ட் மாதத்தின் பருவநிலை: டெல் அவிவ்-ல் சராசரி வெப்பநிலை 27.8°C, குறைந்தபட்சமாக 23.7°C மற்றும் அதிகபட்சமாக 30.2°C வெப்பநிலை இங்கு நிலவுகிறது.