செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்
ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்ற பல்வேறு செயல் நடவடிக்கைகளின் விரிவான அணிவரிசை.
ஆண்டு முழுவதும் நடத்தப்படுகின்ற பல்வேறு செயல் நடவடிக்கைகளின் விரிவான அணிவரிசை.
கிரெடாய் NATCON என்பது, இத்துறையின் பல்வேறு அம்சங்கள், பிரச்சனைகளை விவாதிக்கவும், சிந்தனைகளையும் மற்றும் மிகச்சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்ளவும் ரியல் எஸ்டேட் துறையின் அனைத்து பங்குதாரர்களையும் ஒரு செயல்தளத்தில் ஒருங்கே அழைத்துவருவதை இலக்காகக் கொண்டு கிரெடாய் நடத்தும் சர்வதேச மாநாடாகும். ரியல் எஸ்டேட் துறையின் வல்லுநர்கள் மட்டுமன்றி நிதிசார் உலகம் மற்றும் தொடர்புடைய துணை தொழில் பிரிவுகளைச் சேர்ந்த முதுநிலை நிபுணர்களும் பங்கேற்கிற இந்நிகழ்வில் கடந்த 15 ஆண்டுகளாக சுமார் 800 உறுப்பினர்கள் சராசரியாக கலந்துகொள்கின்றனர். ரியல் எஸ்டேட் தொழில்துறையில் உருவாகிவரும் உலகளாவிய போக்குகளை புரிந்துகொள்ளவும் கிரெடாய் உறுப்பினர்களுக்கு NATCON உதவுகிறது.
NATCON என்பது, ஆண்டுதோறும் கிரெடாய் நடத்தும் ஒரு சர்வதேச மாநாடாகும். வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் பிசினஸ் சூழல் மற்றும் கொள்கை பற்றி விவாதிப்பதற்காக வெவ்வேறு இடங்களில் இது நடத்தப்படுகிறது. பார்ட்னர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் புரொமோட்டர்களுக்கு மேம்படுத்தப்பட்ட விளம்பர வாய்ப்பை இது வழங்குவதோடு சர்வதேச சந்தை இயக்கவியல்கள் மற்றும் புத்தாக்க தொழில்நுட்பங்களை புரிந்துகொள்ள ஒரு நேர்த்தியான வாய்ப்பையும் தருகிறது. இந்திய மற்றும் சர்வதேச ரியல் எஸ்டேட் சந்தைகளுக்கிடையே நல்லுறவை வலுப்படுத்தவும் இது உதவுகிறது.
கருப்பொருள்: தொழில்நுட்ப அறிவியல்
இடம்: ஹோட்டல் ஹில்டன் பொமான்டி, இஸ்தான்புல், துருக்கி
கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை: 955
கருப்பொருள்: அனைவருக்கும் வீடுகள்
இடம்: ஹோட்டல் ரிட்ஸ் கார்ல்டன், ஜகார்த்தா, இந்தோனேசியா
கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை: 811
கருப்பொருள்: தைரியசாலிகளையே ரியால்டி ஆதரிக்கிறது
அனைத்து தடைகளையும் சமாளித்து முன்னேற்றம்
இடம்: ஹோட்டல் ரிட்ஸ் கார்ல்ட்டன், மாஸ்கோ
கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை: 547
கருப்பொருள்: பெரிதாக சிந்தியுங்கள், வித்தியாசமாக சிந்தியுங்கள்
இடம்: ஹோட்டல் W. பார்சிலோனா, ஸ்பெயின்
கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை: 458