கிரெடாய் மகளிர் பிரிவின் தொடக்கம்
கடுமையான உடல் உழைப்பு மற்றும் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்களை தினசரி கையாள்வது ஆகியவை அவசியமாகத் தேவைப்படுகிற ஒரு துறையான ரியல் எஸ்டேட் ஆண்களுக்கான ஒரு தொழில் பிரிவாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. இதன் ஒரு விளைவாக இத்தொழில்துறையில் பெண்களின் தீவிர பங்கேற்பு என்பது மிக அரிதாகவே காணப்பட்டு வந்திருக்கிறது. ஒரு பெண் என்பவர், ஒரு வீட்டை இல்லமாக ஆக்குகின்ற நபராக கருதப்படுகின்ற போது ஒரு இல்லத்தையும்,
குடும்பத்தையும் ஒன்றாக ஒருங்கிணைக்கும் ஒரு மையப் புள்ளியாகத் திகழும் பெண்ணுக்கு இத்தொழில்துறையில் செயல்பாடு என்பது நடைமுறையில் மிக மிக அரிது என்பது ஒரு விசித்திரமான உண்மையாகும்.
இந்த பாகுபாட்டையும், சமநிலையற்ற தன்மையையும் சரிசெய்வதற்காக “கிரெடாய் மகளிர் பிரிவு” (CREDAI Women’s Wing) என்ற பெயரில் ஒரு பிசினஸ் அமைப்பை கிரெடாய் தொடங்கியிருக்கிறது. ரியல் எஸ்டேட் துறைக்குள் தலைமைத்துவ பணிகளில் பெண்களின் அதிகரித்த பங்கேற்பு என்ற இலக்கை அடைவதற்கு கிரெடாய் மகளிர் பிரிவு முயற்சிகளை மேற்கொள்ளும்.
“ரியல் எஸ்டேட் துறையில் டெவலப்பர்களாக செயல்படும் பெண்களை ஒருங்கிணைப்பதும் மற்றும் தலைமைத்துவ பண்பு, பயிற்சி மற்றும் வலையமைப்பு செயல்பாடுகளில் ஆதரவு ஆகியவற்றின் வழியாக தனிப்பட்ட முறையிலும், தொழில்முறை ரீதியாகவும் அவர்களும் மற்றும் பிறரும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகளை வழங்குவது மகளிர் பிரிவின் செயல்திட்டமாகும்.”
இத்தொழில்துறையில் அதிக உத்வேகத்துடன் பெண்களின் தீவிர பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக ஒரு வலுவான நெட்வொர்க்கிங் அமைப்பையும் கிரெடாய் மகளிர் பிரிவு வழங்கும்; அத்துடன், ஒரு அடைகாப்பு செயல்திட்டத்தையும் அது உருவாக்கும். இந்த புதிய முனைப்பு திட்டமானது நாடெங்கிலுமிருந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழில்துறையில் அனைத்து பெண் அக்கறை பங்காளர்களை பாதிக்கிற பல்வேறு முக்கியமான பிரச்சனைகளை கிரெடாய் மகளிர் பிரிவு ஆய்வு செய்து அவைகளுக்கு தீர்வுகாண முற்படும்.
2019 நவம்பர் 15ம் தேதியன்று ஹோட்டல் ஹயாத் ரீஜென்சியில் நடைபெற்ற ஒரு வண்ணமிகு விழாவை கிரெடாய் சென்னை அதன் மகளிர் பிரிவு தொடங்கியது. சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷனின் அறங்காவலரும் மற்றும் இயக்குநருமான டாக்டர். விஜய பாரதி ரங்கராஜன், இந்நிகழ்வின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மகளிர் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக திருமதி. மிருனாளினி மஹர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிரெடாய் மகளிர் பிரிவு, சென்னை குறித்து கருத்து தெரிவித்த கிரெடாய் சென்னையின் தலைவர் திரு. W. S. ஹபீப், “பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பல மாநிலங்களையும், நாடுகளையும் ஆட்சி செய்கின்றனர் மற்றும் அதை அவர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். இத்தகைய நிலையில், ரியல் எஸ்டேட் தொழில்துறையிலும் தலைமை பொறுப்புகளுக்கு பெண்கள் வருவதை ஊக்குவிக்க நாங்கள் விரும்புவதும், வரவேற்பதும் இயல்பான நடவடிக்கையே”.
கிரெடாய் மகளிர் பிரிவு, சென்னை – ன் (CWW) ஒருங்கிணைப்பாளர் திருமதி மிருனாளினி மஹர் இதுபற்றி கூறியதாவது: “ரியல் எஸ்டேட் தொழில்துறையில் பெண்களுக்கு திறனதிகாரத்தை CWW ஏதுவாக்குவது மட்டுமன்றி, பசுமையான மற்றும் தூய்மையான சென்னை மாநகரை உருவாக்குவதற்காக கிரெடாய் சென்னை எடுத்துவரும் CSR செயல்முயற்சிகளுக்கு உறுதுணையாக ஆர்வத்தோடு செயல்படும்.”