நுகர்வோர் குறை
நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை வளர்த்தல்.
கிரெடாய், வாங்குபவர்களின் நலனை பாதுகாப்பதற்கு ஒரு நெஞ்சார்ந்த முயற்சியை எடுக்கிறது. கிரெடாய், 2012 அக்டோபரில் நுகர்வோர் குறை தீர்வு அமைப்பு ஒன்றை நிறுவியுள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட வாங்கியவர் கிரெடாய்-ல் உறுப்பினராக இருக்கக்கூடிய டெவலப்பர் மீது ஒரு புகார் பதிவு செய்யலாம். முதலீட்டாளரின் நலன் பாதுகாப்பை ஒரு வழிமுறையாக மாற்றுவதன் மூலம், ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் தலைமை அமைப்பானது நுகர்வோர் புகார்களை விரைவாக தீர்ப்பதுடன் சகோதர டெவலப்பர்களிடையே சிறந்த விற்பனை நடைமுறையை தூண்டுகிறது. இதுவே, நுகர்வோர்களின் நலனை உறுப்பினராக இருக்கக்கூடிய பில்டர்களுடன் ஒருங்கிணைக்கக்கூடிய அதன் வகையில் முதல் முயற்சியாகும். உறுதிப்பாட்டின் வழியாக டெலிவரி தரங்கள் பொறுத்தவரை இத்துறையை சுய ஒழுங்குமுறைப்படுத்தல் என்பது தற்போது இருந்துவரும் / வாய்ப்புள்ள வருங்கால வாங்குபவர், அரசாங்கம் மற்றும் ஊடகத்திடையே நம்பிக்கையை வளர்க்கும். நகரம் மற்றும் மாநில அளவில் உள்ள அனைத்து சேப்டர்களும் சுய-ஒழுங்குமுறை விதிகளை ஏற்றுக்கொண்டதுடன், சேப்டருக்கு சேப்டர் சரியான விவரங்கள் சிறிது வேறுபட்ட போதிலும், தங்களுடைய குறைதீர்ப்பு அமைப்புகளின் மூலம் நுகர்வோர் குறைகளை தீர்த்து வருகின்றன.