தகுதி அளவுகோல்
நிறுவனம், சென்னையில் சட்டப்படி பதிவுகளுடன் ஒரு பதிவு அலுவலகம் பெற்றிருக்க வேண்டும், நடத்தை நெறிமுறையை நிறைவேற்ற வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு இருந்திருக்க வேண்டும்.
சென்னையில் 2 லட்சம் சதுர அடி கட்டப்பட்டு டெலிவரி செய்திருக்க வேண்டும்.
மூன்றாண்டுகள் அனுபவம் பெற்றிருக்கக்கூடிய கிரெடாய்-ன் தற்போது உறுப்பினராக இருக்கக்கூடிய இரண்டு உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட வேண்டும்.
ஏற்கனவே வேறு பிற மாநிலத்தில் கிரெடாய் உறுப்பினராக இருந்து 2 லட்சம் சதுர அடி கட்டப்பட்டு டெலிவரி செய்திருக்கக்கூடிய விண்ணப்பதாரர் தகுதியுடையவராவார்.
1 லட்ச சதுர அடி முடிந்திருந்து, மேலும் 2 லட்ச சதுர அடிக்கு கட்டி வரப்படும் திட்டங்களுடன் துறையில் ஒரு நல்ல பெயர் ஈட்டியவராக இருக்கக்கூடிய ஒரு புரொமோட்டர்
ஒரு நேர சேர்க்கை கட்டணமாக ரூ. 3 லட்சம் + GST மற்றும் ஒரு ஆண்டு சந்தாவாக ரூ. 75,000/- + GST விண்ணப்பத்துடன் சேர்த்து செலுத்தப்பட வேண்டும்.
ஸ்டில்ட் + 1, ஸ்டில்ட் + 2, வில்லாக்கள் மட்டுமே செய்திருந்து மற்றும் 2 லட்சம் சதுர அடி முடிந்திருந்து, அதே சமயம் ஒரு அனுமதியுடன் அதே காம்பவுண்டிற்குள் குறைந்தபட்சம் 1 முதல் 2 ஏக்கர் குரூப் டெவலப்மென்ட்டும் செய்திருக்கும் ஒரு புரொமோட்டர்.
தனியாக தேவையான 2 லட்சம் சதுர அடி முடிந்திருந்து, ஒரு புதிய நிறுவனமாக தேவையான 2 லட்ச சதுர அடி முடிந்திராத பிற சேப்டர்களைச் சார்ந்த ஒரு கூட்டமைப்பு உறுப்பினராவதற்கு தகுதியுடையதாகும்.
மொத்தம் 2 லட்ச சதுர அடி கொண்ட 3 முதல் 4 SPV (வேறு பெயர்களில்) முடித்திருந்து ஒரு வேறுபட்ட பெயரில் கட்டப்பட்டுவரும் ஒரு திட்டம் கொண்டிருக்கும் ஒரு புரொமோட்டர், அவருடைய ஒரிஜினல் SPV மூடப்பட்டிருக்குமானால் அல்லது ஹோல்டிங் கம்பெனி ஒரு உறுப்பினராக இருந்தால் மட்டுமே உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பிற நிறுவனங்களின் கூட்டாளிகளாக இருந்து, 2 லட்சம் சதுரஅடி முடித்திருந்து, கட்டப்பட்டுவரும் திட்டங்கள் மட்டுமே கொண்ட புதிய வென்ச்சர் விதிமுறைகளை இன்னும் நிறைவேற்றாத புரொமோட்டர்களாக இருப்பார்களானால், அந்த புரொமோட்டருக்கு 30% ஷேர்ஹோல்டிங் இருக்க வேண்டும், நிறுவனத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும் மற்றும் கட்டுமானம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
English
தமிழ்