ரியல் எஸ்டேட் துறைக்கான இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அளவிலான அமைப்பின் ஒரு அங்கமாக இத்தொழில்துறையின் ஒருங்கிணைந்த குரல் மற்றும் கூட்டு பிரதிநிதித்துவம்.
02
கொள்கைகள் மற்றும் செயல் நடைமுறைகள் மீது தாக்கம் ஏற்படுத்துதல் மற்றும் முக்கியமான விஷயங்கள் மீது கொள்கை வகுப்பாளர்களோடு கலந்துரையாடி செயல்படுதல்.
03
மாநகர/மாநில/தேசிய மற்றும் சர்வதேச அளவுகளில் கிரெடாய் சிஎஸ்ஆர் முனைப்புத்திட்டங்கள் வழியாக சமூக மாற்றத்திற்கு பங்களிப்பு செய்வதன் மூலம் ரியல் எஸ்டேட் தொழில்துறை மீதான கண்ணோட்டத்தை நேர்மறையானதாக மாற்றுவது.
04
ரியல் எஸ்டேட் சமூகத்தினர் மத்தியில் கலந்துரையாடி செயலாற்றுதல், பிணைப்பு மற்றும் ஒருமித்தக்கருத்தை வெளிப்படுத்துதல் வழியாக இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பிசினஸ் வலையமைப்புகளின் விரிவாக்கம்.
05
கிரெடாய் அமைப்பில் தலைமைத்துவ பொறுப்புகளுக்கான வாய்ப்புகள் வழியாக கிரெடாய் – ன் தொலைநோக்கு திட்டத்தை உத்வேகத்தோடு முன்னெடுத்தல்.
உறுப்பினர் பதவி வழியாக கிடைக்கும் பிரத்யேக பிராண்டிங் ஆதாயங்கள்.
உங்களது கிரெடாய் உறுப்பினர் நிலையை முன்னிலைப்படுத்துவதற்கு வலைதளம், சந்தையாக்கலுக்கான துணை அம்சங்கள், விளம்பரங்களில் கிரெடாய் லோகோவை அழுத்தமாக காட்சிப்படுத்துதல்.
உறுப்பினர் பதவி வழியாக கிடைக்கும் பிரத்யேக பிராண்டிங் ஆதாயங்கள்.
கிரெடாய் உறுப்பினர் என்ற அந்தஸ்து, சொத்துக்களை வாங்க திட்டமிடுகின்ற நபர்களுக்கு அவர்கள் முதலீடு செய்யவிருக்கின்ற நிறுவனத்தின் மீது நம்பிக்கையை தருகிறது.
கிரெடாய் பிராண்டிங் வழியாக வாடிக்கையாளரை இன்னும் சிறப்பாக சென்றடையும் செயல்திறன் மற்றும் எளிதில் விற்பனை செய்யும் திறன்.